பள்ளிப் பேருந்தில் மோதல் - 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

 
tn tn

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் விஸ்டம் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கு கல்வி பயில வரும் மாணவர்கள் பள்ளி பேருந்துகளில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வழக்கம் போல் நேற்று பள்ளி முடிந்ததும் மாணவர்கள் பள்ளி பேருந்தில் சென்ற நிலையில், பேருந்தில் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  9ஆம் வகுப்பு மாணவர்களிடையே முன்விரோதம் காராணமாக பள்ளிப் பேருந்தில் செல்லும் போது மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

இதில் ஒரு மாணவன் படுகாயம் அடைந்தான். தாக்குதலின் போது மயங்கி விழுந்த மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி பேருந்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.