2 குழந்தைகள் வெட்டிக் கொலை - சம்பவ இடத்தில் எஸ்.பி ஆய்வு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இரண்டு குழந்தைகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்.பி கௌதம் கோயல் நேரில் விசாரணை நடத்தினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அசோக் குமார்-தவமணி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு அருள் பிரகாஷ்(5), வித்ய தாரணி(13), அருள்குமாரி ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். தவமணிக்கும், அசோக் குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் அசோக் குமார், மனைவி உட்பட 3 குழந்தைகளை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அருள் பிரகாஷ் (5), வித்ய தாரணி (13) ஆகிய இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன.
இந்த நிலையில், இரண்டு குழந்தைகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்.பி கௌதம் கோயல் நேரில் விசாரணை நடத்தினார். குழந்தைகளின் தந்தை அசோக் குமாரை பிடித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் அருள் பிரகாஷ் (5), வித்ய தாரணி (13) உயிரிழந்துள்ள நிலையில், படுகாயம் அடைந்த மனைவி தவமணி, குழந்தை அருள்குமாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


