8,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நுழைவாயில் வழியாக வெளியேறியதே கூட்ட நெரிசலுக்கு காரணம்!தவெக கூட்டத்தில் நடந்தது என்ன?
சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கடும் வெயில் காரணமாக அடுத்தடுத்து மயங்கி விழுந்தவர்களை முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4998 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து காலை முதலில் அந்த நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் மைதானத்தை நோக்கி ஏராளமானோர் வந்த வண்ணம் இருந்த நிலையில் அனுமதி அட்டை வைத்திருந்தவர்களை மட்டுமே காவல்துறையினர் மைதானத்திற்குள் அனுமதித்தனர்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வந்து பேச தொடங்கியவுடன் அங்கு இருந்த அனுமதி அட்டை இல்லாத தொண்டர்களும் காவல்துறையினரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு நுழைவு வாயில்களை எட்டி உதைத்து மைதானத்திற்குள் நுழைந்தனர். தொடர்ந்து விஜய் பேசிய போது அப்பகுதியில் கடுமையான வெப்பம் தாக்கிய நிலையில் அடுத்தடுத்து மயங்கி விழுந்தவர்களை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வரக்கூடாது மற்றும் மரங்களின் மீது ஏறக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் தமிழக வெற்றி கழகத்தின் தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டபோதிலும் அதனை எதையும் தமிழகத்தில் நிர்வாகிகள் மதிக்காமல் ஏராளமான தங்கள் குழந்தைகளுடன் இந்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி அதுமட்டுமின்றி தொண்டர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருந்த மரத்தின் மேல் ஏறி நின்று விஜய் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தார். காவல்துறையினர் எவ்வளவு நேரம் போராடியும் அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து விஜய் பேசி முடித்தவுடன் மைதானத்திலிருந்து விஜய் வெளியே வரும்போது அவரை பார்க்க வேண்டும் என ஒரே நேரத்தில் மைதானத்தில் இருந்த 8,000 க்கும் மேற்பட்டோர் ஒரே நுழைவாயில் வழியாக வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த கூட்டணிகளில் ஏராளமான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் சிக்கி அவதிக்குள்ளாகினார்.

