வெயிலில் சேலம் தவெக கூட்டம் - ஒருங்கிணைப்பாளர் கேட்ட நேரத்திலேயே காவல்துறை அனுமதி

 
s s

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்திற்கு உச்சி வெயிலில் நடத்த காவல்துறை நிர்பந்தித்ததாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

Image

இதுதொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தனது எக்ஸ் தளத்தில், “வெயிலில் சேலம் தவெக கூட்டம் - ஒருங்கிணைப்பாளர் கேட்ட நேரத்திலேயே காவல்துறை அனுமதி !

பரவும் செய்தி

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்திற்கு உச்சி வெயிலில் நடத்த காவல்துறை நிர்பந்தித்ததாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல்

“சேலத்தில் விஜய் பங்கேற்ற கூட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதிகோரி தவெக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வழங்கிய கடிதத்தில், மதியம் 12:00 மணி முதல் 3:00 மணிக்குள் கூட்டம் நடத்துவதாகவே குறிப்பிட்டுள்ளார்.” என்று தமிழ்நாடு காவல்துறை கடித்துடன் விளக்கமளித்துள்ளது.

Advertisement

தவறான தகவலைப் பரப்பாதீர்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.