சமந்தா-ராஜ் நிடிமோரு திருமணம்: முன்னாள் மனைவி ஆதங்கம்..!

 
1 1

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் சமந்தா மற்றும் ராஜ் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது சமந்தாவும், ராஜும் காதலித்து வருவதாக கடந்த பல மாதங்களாகவே செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக அவர்கள் அமைதி காத்து வந்த நிலையில், இருவரும் கட்டி அணைத்தபடி எடுத்த புகைப்படங்களை கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் சமந்தா வெளியிட்டார். இதன் மூலம் அவர்கள் காதலித்து வருவது கிட்டத்தட்ட உறுதியானதாக்க கூறப்பட்டது. இருவரும் தி ஃபேமிலி மேன் மற்றும் சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய வெப்தொடர்களில் சேர்ந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.  உதவி இயக்குனரான ஷ்யாமலி டேவை ராஜ் திருமணம் செய்து இருந்த நிலையில், தற்போது பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் சமந்தா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை இன்று (டிச.1) கோவை ஈஷா மையத்தில் எளிய முறையில் 2-வது திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், ராஜ் நிடிமோருவின் முன்னாள் மனைவி ஸ்யாமலி டே தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். யாரின் பெயரையும் குறிப்பிடாமல் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “விரக்தியடைந்த மக்கள்” பற்றிய ஒரு குறிப்பை வழங்கியுள்ளார். சமந்தா மற்றும் ராஜ் ஜோடியை மறைமுகமாக விமர்சித்தே, இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் சாடி வருகின்றனர். அந்த பதிவில், “விரக்தியடைந்த மக்கள் அவநம்பிக்கையான செயல்களைச் செய்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.