சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வேண்டிக்கொண்டு சூலாயுதம் கொண்டுவந்த தவெக நிர்வாகி...!
நாமக்கல்லில் விஜய்யை பார்க்க தவெக நிர்வாகி ஒருவர் சூலத்துடன் வந்திருக்கிறார். நாகப்பட்டிணத்தில் விஜய்க்கு ரசிகர் ஒருவர் வேல்-ஐ பரிசாகி வழங்கி இருந்த நிலையில், நாமக்கல்லை சேர்ந்த தவெக நிர்வாகி, தான் சூலாயுதத்தை விஜய்க்கு பரிசாக வழங்க இருப்பதாகவும், இதற்காக திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கிருந்து மூன்று நாட்கள் இந்த சூலாயுதத்துடன் பாதயாத்திரையாக நாமக்கல் வந்திருப்பதாக அவர் கூறினார்.
நாமக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் தான் விஜய்க்கு சூலாயுதத்தை பரிசளிக்க உள்ளார்.
இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வேண்டிக்கொண்டு சூலாயுதம் கொண்டுவந்த தவெக நிர்வாகி... வாகனத்தில் இருந்தபடி பெற்றுக்கொண்ட விஜய்!
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வேண்டிக்கொண்டு சூலாயுதம் கொண்டுவந்த தவெக நிர்வாகி... வாகனத்தில் இருந்தபடி பெற்றுக்கொண்ட விஜய்!#TVK | #Vijay | #VijayCampaign | #Namakkal pic.twitter.com/VhrdgHOcxv
— PttvOnlinenews (@PttvNewsX) September 27, 2025


