இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பயை வென்ற தினம் இன்று

 
1983

1983ம் ஆண்டு இதே நாளில் தான் இந்திய கிரிக்கெட் அணி கபில் தேவ் தலைமையில் முதல் முறையாக உலக கோப்பையை வென்றது.

1975ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச அளவிலான ஒருநாள் உலக கோப்பை போட்டி தொடங்கப்பட்டது. புரூடென்ஷியல் கோப்பை என்றழைக்கப்பட்ட இந்த தொடர் முதலில் 60 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. பின்னாலில் இது 50 ஓவர் ஒருளாள் போட்டியாக மாற்றப்பட்டது.  முதல் ஐசிசி உலக கோப்பை தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையேயான இந்த போட்டியில் ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் தலைமையிலான இந்திய அணி படுமோசமாகத் தோற்றது. மேலும் அடுத்த நடைபெற்ற  உலக கோப்பை தொடரிலும்  இந்தியாவின் ஆட்டம் மோசமாகவே இருந்தது. இதனால் கோப்பையை வெல்லும் நம்பிக்கை கனவாகவே போனது. 

india 1983

இந்நிலையில்,  3-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் இங்கிலாந்தில் 1983-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்த அணியும் பங்கேற்றது. அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் கபில்தேவ் தலைமையில் களம் கண்ட இந்திய அணியில் ஸ்ரீகாந்த், சுனில் கவாஸ்கர், மொகிந்தர் அமர்நாத், கீர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி, சையது கிர்மானி, மதன்லால், சந்தீப் பட்டில், பல்விந்தர் சந்து, யஷ்பால் ஷர்மா, ரவிசாஸ்திரி, சுனில் வல்சன், வெங்சர்க்கார் ஆகியோர் இடம்பெற்றனர். இந்திய அணி 6 லீக் ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.   

அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் சந்தித்தன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்க் செய்த இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் 38 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி  அணி 52 ஓவர்களில் 140 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக உலக கோப்பையை தன்வசமாக்கியது.  இந்த வெற்றி இந்தியாவில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்கும், அதிக அளவில் ரசிகர்களை தன்பக்கம் இழுப்பதற்கும் வித்திட்டது.