மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி

 
ழ் ழ்

தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். 

Image


தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்ட தூய்மைப் பணியாளர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். அவர்களை அமர வைத்து அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உணவு பறிமாறினர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு 6 அம்ச திட்ட கோரிக்கைகளை செயல்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில், திடீரென தூய்மைப் பணியாளர்கள் ஒரே இரவில் பதாகைகளை தயாரித்து பேரணி நடத்துவது போல தமிழக அரசால் செய்யப்பட்ட ஏற்பாடு விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.