காவல்துறை துப்பாக்கி வச்சு மிரட்டினாலும் போராட்டம் தொடரும் - தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு..!!

 
கூலி உயர்வு கோரி மாநகராட்சி ஆணையரிடம், தூய்மை பணியாளர்கள் மனு கூலி உயர்வு கோரி மாநகராட்சி ஆணையரிடம், தூய்மை பணியாளர்கள் மனு

அரசுடன் நடத்திய தூய்மை பணியாளர்களின் 7ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நீடிக்கும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.  
 
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில்  10 நாளாக தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.  இரவு பகலாக நடந்துவரும் இந்த போராட்டம் இதுவரை 6 கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்தது. இன்று 7ம் கட்டமாக அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு சென்ற போராட்டக் குழுவினர் 15 நிமிடங்களில் வெளியேறினார். 

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில், “இன்று 7ஆம் கட்டமாக அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், எங்களது கோரிக்கையை பற்றி ஒரு வார்த்தை கூட பேச தயாராக இல்லை, எங்களை அப்புறப்படுத்துவதை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை பணம் ஆசை காட்டி திமுக கவுன்சிலர்கள் இந்த போராட்டத்தை கலைக்க பார்க்கிறார்கள் 

சென்னை மாநகராட்சி

நாங்கள் பணி செய்யும் இடம் இங்குதான் எங்களுக்கு இங்கே பேச உரிமை இருக்கிறது.  இங்கே இருந்து கலைந்து சென்று ராஜரத்தினம் மைதானத்தில் போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள் இதுதான் சமூக நீதி அரசா? என்று கேள்வி எழுப்பி விட்டு வந்திருக்கிறோம்.மாநகராட்சி இணை ஆணையர் ஜெயசீலன் 20 ஆண்டுகள் உழைத்த தூய்மை பணியாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில், சில தொழிலாளர்கள் மட்டுமே போராடுகிறார்கள் சொல்கிறார். இதை ஏற்று கொள்ள முடியாது. எங்களது கோரிக்கை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்.  

காவல்துறை துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை தொடர்ந்து போராடுவோம்.  அரசு தரப்பில் இருந்து பேசுவதற்கு தயாராக இல்லை; எங்களை வேறு இடத்திற்கு செல்ல சொல்கிறார்கள்  ஆனால் நாங்கள் ஒரு போதும் இந்த போராட்டத்தில் இருந்து பின் வாங்க மாட்டோம். போராட்டம் தொடரும்.  தேர்தலுக்கு முன்னர் ஒரு பேச்சு தேர்தலுக்கு பின்னர் ஒரு பேச்சு என திமுக அரசு ஈடுபடுகிறது. போராட்ட காரர்கள் பணிக்கு திரும்பியதாக வரும் தகவல் பொய்யான தகவல்கள்” என்று கூறினர்.