"71 நாட்களாக வேலையில்லை, சாப்பாட்டுக்கே வழியில்லை”- குரலை உயர்த்திய தூய்மை பணியாளர்கள் கைது
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 சேர்ந்த தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகைக்கு மனு அளிக்க வந்த போது, அனுமதியில்லாமல் கூட்டமாக செல்ல முற்பட்டதால் போலீசார் கைது செய்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின்/மண்டலம் 5, 6 சேர்ந்த தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் இடம் மனு அளிக்க இன்று வருவதாக தெரிவித்தனர். இதனால் ரிப்பன் மாளிகை வெளியே, காவல்துறை தடுப்புகள் அமைத்தும், ரிப்பன் மாளிகை வருபவர்களை தீவிரமாக சோதனை மேற்கொண்டதற்கு பிறகும் உள்ளே அனுமதித்தனர். ஏற்கனவே ஆகஸ்டு 1 முதல் 13 வரை மண்டலம் 5 மற்றும் 6 யை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம் மற்றும் தனியார் மயத்தை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆகஸ்டு 13ல் நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் கைது செய்யப்பட்டனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள், போராட்டம் நடத்தியும் பணியமர்ந்தப்படாமல் உள்ளதால், இன்றயை தி்னம் ஆணையாளரை சந்தித்து தூய்மை பணியாளர்கள் மனு அளிக்க வந்தனர். இந்நிலையில் ரிப்பன் மாளிகைக்கு மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்களை சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் வைத்து காவலர்கள்கைது செய்தனர். பேருந்துகளில் ஏற மறுத்த தூய்மை பணியாளர்கள் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பின் பேசிய தூய்மை பணியாளர்கள், 71 நாட்களாக வேலை இல்லாமல் உள்ளோம். பழைய முறைப்படி பணி வழங்க வேண்டும் என ஆணையாளர் சந்தித்து மனு அளிக்க வந்தோம். ஆனால் காவலர்கள் எங்களை கைது செய்கிறார்கள். நாங்கள் தனியார் நிறுவனத்தில் பணியில் சேராமல் உள்ளோம். தொடர்ந்து ரிப்பன் மாளிகை அருகே செல்ல கூட அவர்கள் எங்களை தடுக்கிறார்கள். எங்களை கைது செய்தாலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்..மனு அளிக்க தானே வந்தோம் நாங்கள் என்ன தீவிரவாதிகளா என கேள்வி எழுப்பினர். பிள்ளைகளின் படிப்பு செலவிற்கும், வேலை இல்லாமல் உணவுக்கு கூட வருமானம் இல்லாமல் உள்ளோம், தூய்மை பணியாளர்களின் எந்த கேள்விக்கும் காவலர்கள் இடம் பதில் இல்லை என்பதே நிதர்சனமாக உண்மை. Obey the order என்பது போல் தூய்மை பணியாளர்கள் இடம் கடுமையாக நடந்துக்கொண்டதாக தெரிவித்தனர்.


