"சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது மக்களே" - முக்கிய அறிவிப்பு இதோ!

 
crackers

வரும் நவம்பர் 4ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருப்பதையொட்டி பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

crackers

'பட்டாசுகளை வெடித்த பிறகு அவை எளிதில் தீப்பிடிக்காத அளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை சேகரித்து எரியக்கூடிய பொருட்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். குழந்தைகள் பெற்றோர் மேற்பார்வையில் பட்டாசு வெடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் பட்டாசு வெடிக்கும்போது வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அருகில் நின்று பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. ஒரு கை தூரத்தில் நிற்க வேண்டும். தண்ணீர் வாளிகள் மற்றும் போர்வையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பட்டாசு வெடிக்கும்போது காலணிகளை பயன்படுத்துங்கள். பட்டாசுகளை பயன்படுத்திய பிறகு சோப்பு தண்ணீரால் கைகளை கழுவ வேண்டும். கையில் பட்டாசுகளை கொளுத்த கூடாது. தீபங்கள் மற்றும் மெழுகுவர்த்தி எரியும் இடத்தில் பட்டாசுகளை வைக்க வேண்டாம். மின் கம்பம் மற்றும் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். பாதி எரிந்த பட்டாசுகளை தூக்கி எறியக் கூடாது. பட்டாசுகளை வெடிக்க தீப்பெட்டி அல்லது லைட்டர்களை பயன்படுத்தக் கூடாது. சானிடைசர் பயன்படுத்திய பிறகு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.