மாரிமுத்து மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது - சரத்குமார் இரங்கல்

 
sarathkumar sarathkumar

நடிகர் மாரிமுத்து மறைவிற்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்
 

நடிகரும் , இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை 8.30  மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  மாரிமுத்து மறைவு திரையுலகினர் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. மாரிமுத்து மறைவிற்கு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், நடிகர் மாரிமுத்து மறைவிற்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இயக்குனரும், பிரபல குணச்சித்திர நடிகருமான அன்பு நண்பர் மாரிமுத்து அவர்கள் திடீர் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மேஜிக் பிரேம்ஸுடன் இணைந்து தயாரித்த 'புலிவால்' திரைப்படத்தில் அவருடன் பணியாற்றிய நாட்களை நினைவுகூறுகிறேன். வேறு எவராலும் பூர்த்தி செய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கி மறைந்த அவரது பிரிவால் தீராத வேதனையில் வாடும் அவரது  குடும்பத்தினர், நண்பர்கள், கலைத்துறையினர், ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.