#Sarathkumar சூரியவம்சத்தில் கலெக்டர் ஆக்கினேன்.. அதேபோல் ராதிகாவை எம்.பி. ஆக்குவேன்: நடிகர் சரத்குமார்!

 
Sarathkumar Sarathkumar
பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார் நடிகை ராதிகா.
அவர் இன்று திருப்பரங்குன்றத்தில் வழிபாடு நடத்தி தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
அவருடன் அவரது கணவரும் நடிகருமான சரத்குமாரும் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமார் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:
என் மனைவி போட்டியிடுவது நான் போட்டியிடுவது போலத்தான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்பதை தெளிவாக தெரிந்து கொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அந்தப் பெண்ணையே வேட்பாளர் ஆக்கி இருக்கிறார்.
சூரியவம்சம் திரைப்படத்தில் படிக்காத நான் எப்படி ஒரு கலெக்டரை ஆக்கினேனோ அதேபோல் எனது மனைவியை நிச்சயம் எம்.பி. ஆக்குவேன் என்று கூறினார்.