நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடு, என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் - சசிகலா வாழ்த்து
அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எளிமையின் சிகரமாக இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள், அவருடைய அன்பினாலும், பாசத்தினாலும் தமிழக மக்கள் அனைவரையும் ஈர்த்துள்ளார்கள். ஆண்டவனின் பரிபூரண ஆசிர்வாதத்தினாலும், கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும், ‘சூப்பர் ஸ்டார்’ என்ற உச்ச நிலையினை அடைந்தபோதும், எளிமையான அணுகுமுறையினால், எல்லோரையும் சமமாக மதித்து, அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் அவருடைய உயர்ந்த பண்பினை எண்ணி மிகவும் பெருமையடைகிறேன். அவர்களது அன்பும், நட்பும், சகோதரபாசமும் என்றென்றும் நிலைத்திருக்க ஆண்டவனின் அருள் கிடைக்கப்பெற வேண்டும்.
அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
— V K Sasikala (@AmmavinVazhi) December 12, 2024
எளிமையின் சிகரமாக இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள், அவருடைய அன்பினாலும், பாசத்தினாலும் தமிழக மக்கள் அனைவரையும்…
அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள், நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


