ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு சசிகலா இரங்கல்!

 
sasikala sasikala

ஈ.வெ.கி.ச. இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன் என சசிகலா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புரட்சித்தலைவர் காலத்திலிருந்து தனது இறுதி மூச்சுவரை தொடர்ந்து இயக்கத்தில் பயணித்த, மறைந்த கழக முன்னோடி ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத் அவர்களின் மகனும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.