இந்திய வீராங்கனை பவானி தேவிக்கு சசிகலா வாழ்த்து!!

 
sasikala

இந்திய வீராங்கனை பவானி தேவிக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார். பவானி தேவி  ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற்ற  சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் பங்கேற்றார். இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் முதல் ‘தமிழச்சி’… தமிழ்நாட்டுக்கே பெருமை – வாழ்த்து கூறிய ஆளுநர்!

இந்த சூழலில் சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் வாள் வீச்சுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 


இந்நிலையில் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், "சீனாவில் உள்ள வுக்ஸி நகரில் நடைபெற்று வரும் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் மகளிருக்கான போட்டியில்  தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை நம் தமிழகத்திற்கு பெற்று தந்த பவானி தேவி அவர்கள் மென்மேலும் பல்வேறு சாதனைகளை புரிய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.