ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் திருச்சி மாநாட்டில் பங்கேற்பா? - சசிகலா பேட்டி

 
sasikala

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்வேன் என சசிகலா கூறியுள்ளார். 

சென்னை தியாகராய நகரில் சசிகலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் திருச்சி மாநாட்டில் பங்கேற்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய சசிகலா கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க நேரம் கேட்டால் நிச்சயம் சந்திப்பேன். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்வேன். கட்சியில் நான் எல்லோருக்கும் பொதுவானவர். கால நேரம் வரும்போது அனைவரும் ஒன்றிணைவோம். 

ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் சட்டசபையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்று சேரக்கூடாது என தி.மு.க. செயல்பட்டு வருகிறது.கொடநாடு வழக்கை அரசியலுக்காக தி.மு.க. பயன்படுத்தி வருகிறது. இந்த வழக்கு இப்போதைக்கு முடியாது. இவ்வாறு சசிகலா கூறினார்.