"அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை" - சசிகலா பரபரப்பு பேட்டி!!

 
sasikala

அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

சசிகலா சென்னை திநகரில்  நடைபெற்ற கட்சி நிர்வாகி  குணசேகரனின் இல்ல  திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.  இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பதவிக்காக அதிமுகவில் உள்ள ஒரு சிலர் எனக்கு எதிராக பேசுகின்றனர் . எல்லோரும் பேசவில்லை . அதிமுகவில் நான் இணைவது குறித்து தொண்டர்களின் கையில்தான் உள்ளது. 

sasikala

அதிமுகவுக்காக தலைவர் தொண்டர்களால் தேர்வு செய்யப்படும்.  அந்த நிலை தற்போது இல்லை.   அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர்; யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது. என்னை கட்சியில் இணைக்க முடியாது என சொல்வதற்கு அவர்கள் யார் ?அதிமுகவின் தலைமை குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தொண்டர்களுக்கு தான் உண்டு. அதிமுகவில் ஒரு சிலர்தான் எதிர்க்கிறார்கள்;  என் தலைமையில் அதிமுக செயல்படும் என எனக்கு 100% நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

sasikala

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை. ஓராண்டில் 505 திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக அரசுதான் சொல்கிறதே தவிர, மக்களுக்கு திட்டங்கள் சென்றடையவில்லை. வருடம் முழுவதும் மத்திய அரசை எதிர்த்துக்கொண்டே இருந்தால், நீங்கள் எப்படி உங்கள் திட்டங்களை செயல்படுத்துவீர்கள்? மாநில அரசு,  மத்திய அரசை முறையாக அணுகி திட்டங்களை கேட்டுப்பெற வேண்டும்; சண்டை போடக்கூடாது. நிர்வாகம் சரியாக இல்லாததாலேயே தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என்றார்.