சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் சசிகலா! ஆதரவாளர்களுடன் ஆலோசனை

 
சசிகலா

வரும் சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களை குறிவைத்து சசிகலா களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை மேற்கொண்டார். 2017ல் சசிகலா பொதுச்செயலாளராக இருந்தபோது அவர்கள் அதிமுகவில் வகித்த பொறுப்புகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாரா என ஆதரவாளர்களை கேட்டு வரும் சசிகலா, தென் மாவட்டங்களில் குறிப்பாக முக்குலத்தோர் வாக்குகளை குறி வைத்து களமிறங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டப்படி சசிகலா அவர்கள் தேர்தலில் போட்டியிட இன்னும் ஓராண்டுக்கு மேல் தடை உள்ளது (2027 வரை) என்றும் கூறப்படுகிறது.