மிகுந்த மன வேதனை அடைந்தேன்.. பழனியம்மாள் மறைவுக்கு சசிகலா, விஜயகாந்த் இரங்கல்..

 
ஓபிஎஸ் தாயார் மறைவு ஓபிஎஸ் தாயார் மறைவு

முன்னாள் முதலமைச்சரும்,  அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு சசிகலா, தேமுதிக தலைவர் விஜய்காந்த்  ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

sasikala

வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.தனது தாயாரை இழந்து வாடும் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்,'என்று கூறியுள்ளனர்.

vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது இரங்கல் குறிப்பில், “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையடைந்தேன். தாயாரை இழந்து தவிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கு,உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.