டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து - சசிகலா வரவேற்பு

 
sasikala

தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு சசிகலா வரவேற்பு தெரிவித்துள்ளார். 

தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏல பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்படுவதாக பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.இதேபோல் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தலைவர்கள் பலறும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு சசிகலா வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர் மாவட்டம்ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்தியஅரசு டெண்டர் கோர இருப்பதாக செய்திகள் வந்தவுடனே,இத்திட்டத்தை கைவிடவேண்டி கடந்த 04-04-2023 அன்று எனது அறிக்கையின்வாயிலாக மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். எங்களது கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாட்டில் இத்திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்து இருப்பதற்கு தமிழக விவசாயிகளின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுக்கும் மகிழச்சியை அளிக்கின்ற செய்தியாகும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.