தமிழக புகைப்படக்கலைஞர் ஸ்ரீராம் முரளிக்கு சசிகலா வாழ்த்து!!

 
sasikala

ஸ்ரீராம் முரளி அவர்கள் விருதினை பெற்று நம் மண்ணின் பெருமையை உலக நாடுகள் அறிந்திட செய்தது நம் அனைவருக்கும் மிகவும் பெருமை அளிக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

sasikala

இதுதொடர்பாக சசிகலா தனது சமூகவலைத்தள பக்கத்தில், "லண்டனில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகம் மூலம் உலகம் முழுக்க புகைப்படக்கலைஞர்கள் எடுத்த சிறந்த வனஉயிர் புகைப்படங்களை தேர்வு செய்வதற்கான போட்டியில் பங்குபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் திரு.ஸ்ரீராம் முரளி அவர்களுக்கு, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் காடுகளில் எடுக்கப்பட்ட மின்மினி பூச்சிகளின் புகைப்படத்திற்கு "முதுகெலும்பற்ற உயிரினங்கள்" பிரிவில் விருது வழங்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் இருக்கும் மனம்பள்ளி காட்டில் மின்மினி பூச்சிகள் ஒருசேர ஒன்றாக ஒளி எழுப்பும் சுவாரசிய சம்பவத்தை படம் பிடித்து விருது பெற்ற புகைப்பட கலைஞர் திரு.ஸ்ரீராம் முரளி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.



சிறந்த வனஉயிர் புகைப்படங்களுக்கான போட்டியில் உலகம் முழுவதும் 95 நாடுகளில் இருந்து வந்த 49,957 போட்டியாளர்களில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட தமிழக புகைப்படக்கலைஞர்  திரு.ஸ்ரீராம் முரளி அவர்கள் விருதினை பெற்று நம் மண்ணின் பெருமையை உலக நாடுகள் அறிந்திட செய்தது நம் அனைவருக்கும் மிகவும் பெருமை அளிக்கிறது. மேலும்,  மின்மினி பூச்சிகள் குறித்து தொடர் ஆய்வுகளை செய்து வருகின்ற வைட் என்ற தன்னார்வு அமைப்பிற்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.