சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்!

 
ச் ச்

அதிமுக முன்னாள் எம்.பி.சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவரது பதவியை பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதிமுகவில் எனது பொறுப்பை ராஜினாமா செய்யப் போகிறேன்- சத்யபாமா

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திருமதி V. சத்தியபாமா, Ex. M.P., அவர்கள் இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.