யூடியூபர் சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் அதிரடி கைது

 
சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் அதிரடி கைது செய்யப்பட்டார்.

savukku

பெண் காவலர்களை அவதூறாக பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்  கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில்  அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். 

இந்நிலையில் சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார். முத்துராமலிங்க தேவரை அவதூறாக பேசிய வழக்கில் கோவை போலீசார் கைது செய்தனர். சென்னை புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கரை போலீசார், கைது செய்து கோவைக்கு அழைத்து சென்றனர்.