சவுக்கு சங்கருக்கு இறுகும் பிடி... மேலும் 2 வழக்குகளில் கைது!!!

 
tn

யூ டியூபர் சவுக்கு சங்கர் மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். 

tn

யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கடந்த 4ம் தேதி தேனியில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இதை தொடர்ந்து பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரையடுத்து  சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் புகார் கூறினர்.

tn

இந்நிலையில் சென்னையை சேர்ந்த பெண் பத்திரிகையாளர், வீரலட்சுமி ஆகிய இருவர் அளித்த புகாரில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளிலும் யூ டியூபர் சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்று கைது செய்தனர். இரு வழக்கிலும் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவினை போலீசார் சவுக்கு சங்கரிடம் வழங்கினா். இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக கோவை மத்திய சிறையில் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர்  அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.