வழக்கு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு மாற்றம்- அலைக்கழிக்கப்படும் சவுக்கு சங்கர்

 
ச் ச்

யூடியுபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நிர்வாக காரணங்களுக்காக யூடியுபர் சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

Image

கஞ்சா வழக்கில்  கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிடிவாரண்டில்  சிறையடையில் அடைக்கப்பட்ட சவுக்கு  சங்கர்  தொடர்பான விசாரணை இன்று மீண்டும் மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கஞ்சா வைத்திருந்த வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம்தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் நிர்வாக காரணங்களுக்காக யூடியுபர் சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம் செய்தார். 

இதனைத் தொடர்ந்து பிடிவாரண்டை ரத்து செய்து தனக்கு ஜாமின் வழங்கவேண்டும் என சவுக்குசங்கர் கோரிய வழக்கில் மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்ட பின்னர், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சவுக்கு சங்கர்  அழைத்துச் செல்லப்பட்டார்.