என் கைதுக்கு உதயநிதிதான் காரணம்- சவுக்கு சங்கர்

 
சவுக்கு

யூடியூப் சேனல் நடத்தி வந்த சவுக்கு சங்கர் என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதை தொடர்ந்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கிலும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளார். 

Image

இந்நிலையில் இன்று கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு போலீஸ் வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை அழைத்துச் சென்றனர். அப்பொழுது சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வந்தபோது சவுக்கு சங்கருக்கு திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக ஆத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சவுக்கு சங்கரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்தனர். இரண்டு மணி நேர சிகிச்சைக்குப் பிறகு ஆத்தூர்  மருத்துவமனையில் இருந்து சேலம் புழல் சிறைக்கு போலீஸ் வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் போலீசார் கொண்டு சென்றனர்.

போலீசாருடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வருகையில் சவுக்கு சங்கர், தான் கைது செய்யப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம், அவரின் தூண்டுதல் பேரில் என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுவருகின்றன என பத்திரிக்கையாளர்களை பார்த்து கூறிவிட்டு சென்றார்.