எனக்கு ஹெச்ஐவி பாதிப்பா?- சவுக்கு சங்கர் விளக்கம்

 
savukku savukku

ஊடகவியலாளர் சவுக்கு சங்கருக்கு  கடந்த 5 ஆண்டுகளாக ஹெச்ஐவி பாதிப்பு இருப்பதாகவும், அவரால் பெண் ஒருவருக்கும் நோய் தொற்றுக்கு ஆளாகும் துன்பம் நேர்ந்திருப்பதாக அண்மையில் திருச்சி சூர்யா டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

Image

மேலும் இந்த நோய் தொற்று பற்றி கடந்த அக்டோபர் 12ம் தேதி சவுக்கு சங்கர் எடுத்த லேப் டெஸ்ட்டில் எய்ட்ஸ் தொற்று உறுதியான ரிப்போர்ட்டை அனுப்பியிருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார் என்றும் திருச்சி சூர்யா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Image

இந்நிலையில் தனக்கு ஹெச்ஐவி பாதிப்பு என்று பரப்பப்பட்டு வந்த செய்திகள் மற்றும் லேப் ரிப்போர்ட் முற்றிலும் போலியானது, பரப்பியவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடுத்துள்ளேன் சவுக்கு சங்கர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்றும், அங்கு எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான ஆவணங்கள் திருடப்பட்டு, நான் ஹெச்ஐவி வரசால் பாதிக்கப்பட்டுள்ளேன் என சமூக வலைதளங்களில் வதந்தி பரபரப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

.  -