“பாமக முச்சந்தியில் நிற்க அண்ணாமலையே காரணம்”- சவுக்கு சங்கர்

 
ச் ச்

பாமகவில் நிலவும் பிரச்சினைக்கு காரணமே அண்ணாமலைதான் என ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அளவிலான பாஜக கூட்டணியில் பாமக இல்லை.! அன்புமணி ராமதாஸ் அதிரடி  அறிவிப்பு.! - Dinasuvadu


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும்,  கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே  உட்கட்சி மோதலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இருவரும் மாறி, மாறி  நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமனம் காரணமாக பாமகவில் நிகழும் மாற்றங்களும், மோதல்களும் பெரும் பேசுபொருளாகியுள்ளன.  ராமதாஸ், தமிழகம் முழுவதும்  ஒழுங்காக செயல்படாத மற்றும்  பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை அடுத்தடுத்த நியமனம் செய்து வருகிறார். அதன்படி இதுவரை 60-க்கும் மேற்பட்ட கட்சி மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.  அந்தவகையில் 60 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 39 மாவட்ட தலைவர்களை அவர் மாற்றியுள்ளார்.  பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டிவருகிறார்.



இந்நிலையில் அண்மையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அன்புமணி எப்போதும் அவர் தந்தை மீது அதிக மரியாதை வைத்து இருக்கிறார்.. இது ஒரு சின்ன இடர்பாடுதான். ஒரு குடும்பத்தில் இயற்கையாக வருகிற பிரச்சனை இது.  ராமதாஸ் மீது பிரதமர் மோடிக்கு மிகுந்த மரியாதை உள்ளது. பாமகவில் விரைவில் பிரச்னை முடிந்து பலமான பாமக வெளிவரும்” என்றார். இந்த பேட்டியை எக்ஸ் தளத்தில் மேற்கோள்காட்டியுள்ள சவுக்கு சங்கர், “பிரச்சினைக்கு காரணமே அண்ணாமலைதான்.   சவுமியா அன்புமணியை  மத்திய அமைச்சராக்குகிறேன் என்று ஆசைகாட்டி, சபரீசனின் திட்டத்தை செயல்படுத்தி குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு பாமக இன்று முச்சந்தியில் நிற்க முழுமுதல் காரணம் அண்ணாமலையே” எனக் கூறியுள்ளார்.