‘என் உயிருக்கு ஆபத்து, கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்’ சவுக்கு சங்கர் பரபரப்பு

 
சவுக்கு

என் உயிருக்கு ஆபத்து, கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் என போலீசார் முன்னிலையிலேயே சவுக்கு சங்கர் ஆவேசமாக பேசி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ரெட் பிக்ஸ் யூட்யூப்  சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவல்துறையினர் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக கோவையை சேர்ந்த காவலர் சுகன்யா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த 4ம் தேதி தேனி அருகே பழனி செட்டிப்பட்டி யில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.  அத்துடன் அவரது காரில் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் அவர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோவை அழைத்துவரப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்த போலீசார், அதற்கு சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே, சவுக்கு சங்கர் இன்று மருத்துவ பரிசோதனைக்காக கோவை சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, அவர் என் உயிருக்கு ஆபத்து, கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்.கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரே என் கையை உடைத்தார் என போலீசார் முன்னிலையிலேயே சவுக்கு சங்கர் ஆவேசமாக பேசி சென்றார்.