சவரனுக்கு ரூ. 280 உயர்ந்த தங்கம் விலை..

 
 தங்கம் விலை

சென்னையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்திற்கு எப்போதுமே மவுசுதான் என்றாலும் தென்னிந்தியாவில் தங்க வர்த்தகம் மிகவும் அதிகம்.. தங்கத்தை சிறந்த முதாலீடாக கருதுவதோடு, ஆபத்துக் காலங்களில்  உதவும் நண்பனாகவும்  கருதுகின்றனர்.  பொருளாதார பாதுகாப்பு அளிப்பதாலும், தங்கத்தின் மீதான முதலீடு லாபம் அளிப்பதாலும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தை நாடுகின்றனர். ஆனால் தங்கம் விலையோ பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் உயர்ந்துகொண்டே செல்கிறது.   

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.  அந்த வகையில் கடந்த 2 நாட்களாக சரிந்து வந்த  தங்கம் விலை இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது,. அதன்படி, சென்னையில் இன்று   22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.44,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,545க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.