சவரனுக்கு ரூ. 520 குறைந்த தங்கம் விலை..

 
gold

கடந்த 2 நாட்களாக அதிரடி உயர்வை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.43,520க்கு விற்பனை செயப்படுகிறது.  

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படுவது வழக்கம்.  அந்தவகையில் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரம் சற்று ஆட்டம் கண்ட நிலையில், அதன்பிறகு மக்கள் பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் பிப்1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி, வைர நகைகளுக்கான சுங்கவரி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.  

தங்கம் விலை

நேற்று முன்தினம் ( பிப்.1ம் தேதி)காலையில் சவரனுக்கு ரூ.176 அதிகரித்து ரூ.42,880க்கு விற்பனையாது.  பின்னர் மாலையில் சவரனுக்கு ரூ.616  உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,320க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 712  உயர்ந்தது ஒரு சவரன் ரூ. 40,040க்கு விற்கப்பட்டது.  இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்திருக்கிறது. அதன்படி இன்று சென்னையில் 22 கேரட்  ஆபரணத்தங்கம்  கிராமுக்கு, ரூ. 65 குறைந்து ஒரு கிராம் 5,440 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ. 43,520க்கும் விற்கப்படுகிறது.   இதேபோல்  சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.4 குறைந்து ரூ.76.40-க்கு விற்பனை செய்யபப்டுகிறது.