கொடநாடு வழக்கு - சயான் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

 
Tn Tn

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.

கடந்த 2017 -ல் நடைபெற்ற கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் உயிரிழந்த நிலையில், சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஏராளமான சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், சம்பவத்தன்று நடந்த தொலைபேசி அழைப்பு பதிவுகள் அனைத்தும் சிபிசிஐடி போலீசார் பெற்று விசாரித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட 12 பேர் உள்ளிட்ட சிலரின் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குகளையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். 
இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜரானார். கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் ஆஜரானார். கடந்த வாரம் ஆஜராக சயானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. இதனிடையே இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆஜரானார் என்பது குறிப்பிடதக்கது.