எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
முரசொலி அறக்கட்டளை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக பேசிய எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் எனவும், பஞ்சமி நிலத்தில் அறக்கட்டளை கட்டப்பட்டுள்ளதாகவும் எல்.முருகன் கூறிய நிலையில், இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த நிலையில், முரசொலி அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த நிலையில், முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. களங்கம் கற்பிக்கும் நோக்கமில்லை என எல்.முருகன் கூறியதை அடுத்து, வழக்கைத் தொடரும் எண்ணம் இல்லை என அறக்கட்டளை தரப்பு கூறியதால் வழக்கு ரத்து செய்யப்பட்டது. முரசொலி அறக்கட்டளையின் பெருந்தன்மையை பாராட்டுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு தெரிவித்துள்ளது.