ஓபிடி பெற தடை கோரிய வழக்கு : இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என ஒதுங்கிய சுப்ரீம் கோர்ட்..
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கு ஒ.டி.பி. பெற தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தி.மு.க சா்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
.திமுக ஓரணியில் தமிழ்நாடு என்னும் உறுப்பினர் சேர்க்கை பரப்புரையை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்த பரப்புரையில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று மக்களிடம் பேசி, வாக்களர் அடை விவரங்களை பெற்றுக்கொண்டு செல்போன் எண் மற்றும் ஓடிபி மூலம் உறுப்பினர்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களிடம் ஒடிபி பெற தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தி.மு.க தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், உறுப்பினர் சேர்க்கையின் போது otp கேட்பது என்பது ஒரு உறுதிப்படுத்தலுக்காக மட்டுமே, பல்வேறு செயலி மூலமாக செயல்படும் வாகன சேவை நிறுவனங்கள் இதுபோன்று ஓடிபி கேட்கின்றனர். பல்வேறு சேவைகளுக்காக இதுபோன்று otp கேட்கப்படுகின்றன. பொதுநல மனு என்ற பெயரில் அரசியல் ரீதியாக இந்த வழக்கானது கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே பொதுநல மனு என்ற அந்த விவகாரத்தில் மனுதாரரின் மனு விசாரணைக்கு உகந்ததா என்பதை கூட நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. எனவே எங்களுடைய கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் விதித்த அந்த இடைக்கால தடை உத்தரவை நீக்க வேண்டும் என கூறினார்
ஆனால் நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் நாங்கள் உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனு தள்ளுபடிசெய்தனர். அதே வேளையில் மனுதாரர் இடைக்கால தடையை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்தனர்


