நாடாளுமன்றத்தில் செங்கோல்.. பிரதமருக்கு அதை நினைவுபடுத்த வேண்டுமோ? - பா.சிதம்பரம் கருத்து..

 
chidambaram

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்  செங்கோல் வைக்கப்பட்டுள்ளது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய நாடளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே, சோழர்களின்  செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “திருவள்ளுவர் அரசனுக்கு தேவையான நான்கு குணங்களில் ஒன்றாக 'செங்கோலை' வைத்தார்-குறள் 390 (செங்கோல்: செங்கோன்மை). மற்ற மூன்று குணங்கள்: கொடை, இரக்கம் மற்றும் ஏழை, எளிய மக்களை காத்தல். குறள் 546-ல் அரசனைத் திருவள்ளுவர் எச்சரிக்கிறார். 'வேல் அன்று வென்றி தருவது மன்னவன் கோல்அதூஉம் கோடாதெனின்' (கோடாத கோல்: வளையாத செங்கோல்) 2023-ம் ஆண்டில் தேவையான பாடத்தை அன்றே வள்ளுவர் சொன்னார்.

நாடாளுமன்றத்தில் செங்கோல்.. பிரதமருக்கு அதை நினைவுபடுத்த வேண்டுமோ? - பா.சிதம்பரம் கருத்து..

மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் வெடித்து 3 வாரங்கள் ஓடிவிட்டன. 75 பேர் மடிந்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாள் வரை பிரதமர் மணிப்பூர் கலவரங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. மணிப்பூர் மக்கள் வன்முறையை தவிர்த்து அமைதியாகவும், சமாதானமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுக்கவில்லை. அவருடைய கரங்களில் உவமையான 'செங்கோல்' இருக்கிறது என்று யாராவது அவருக்கு நினைவு படுத்த வேண்டுமோ?” என்று கூறியுள்ளார்.