'வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம்' - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

 
stalin

விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில்  வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கும் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
 

stalin

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ரூபாய் 9.24 கோடி மதிப்பில் 672 விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் சூரிய கூடார உலர்த்திகள் அமைத்தல் ,சூரிய மின் வேலி அமைத்தல் ,சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்தல் மற்றும் வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல் ஆகிய திட்டங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக 9 விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

stalin

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.  அதன் தொடர்ச்சியாக இயற்கையாக இருக்கக்கூடிய சூரிய சக்தியை பயன்படுத்தி, விவசாயத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் , குறிப்பாக பாசன நீர் இணைப்பதற்கும் ,உலர வைப்பதற்கும், பயிர்களை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும், உரிய தொழில்நுட்பங்களை வேளாண்மை பொறியியல் துறை மூலம் ,விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி ,அவற்றை மானிய விலையில் வழங்கிட வேளாண்மை துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2021 -22 தெரிவித்தபடி, சூரிய கூடார உலர்த்திகள் அமைக்கும் திட்டம் ,சூரிய மின் வேலி அமைக்கும் திட்டம் ,சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைக்கும் திட்டம் ,வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் வழங்கும் திட்டம் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டங்கள் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் https://mis.aed.tn.gov.in/login என்ற இணையதளத்தின் வாயிலாக திட்டங்கள் பற்றிய விவரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.