3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

 
rain school

தமிழகத்தில் கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இல்லை. கரையை கடக்கும் பகுதி சென்னையை ஒட்டி இருக்கும் என்றாலும் கரையை கடக்கும் நேரம் மற்றும் இடத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 4 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கில் 130 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

school

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையைக் கடக்கிறது.  இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என தென் மண்டல வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

schools

சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருவதால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது .  இந்நிலையில்  இன்று மாலை புயல் கரையை கடக்கும் என்பதால் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதனால் ன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.