மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புயல் 30ம் தேதி கரையை கடக்கும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாளை காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு 480 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
இந்த நிலையில், மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். இதேபோல் திருவாரூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.