ராமேஸ்வரம் தீவு பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை

 
school

ராமேஸ்வரம் தீவு பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

  
ராமநாதபுரத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேகவெடிப்பு காரணமாக ராமேஸ்வரத்தில் 41 சென்டி மீட்டர்  அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது. பாம்பனில் 19 சென்டி மீட்டர் மழை பொழிவால் வெள்ளக்காடாக மாறியது.  ராமநாதபுரம் பேருந்து நிலையம் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சியளித்ததால் பயணிகள் அவதி அடைந்தனர். மண்டபம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல் ராமேஸ்வரம் தீவிலும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. 

இந்த நிலையில், ராமேஸ்வரம் தீவு பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.