ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஜன 22 விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...

 
குடியரசு தினவிழாவை சிறப்பாகக் கொண்டாடப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு !


தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி ஆசிரியர்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல்  அதிகரித்து வருவதன்  காரணமாக  1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து  மாணவர்களுக்கும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட போதிலும், ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.  அதேநேரம் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிகளுக்கு வர வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள்  நடைபெற்று வருகின்றன.

31 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணி புரியலாம்!

இந்நிலையில், மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வருகின்ற சனிக்கிழமை 22.01.2022 ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ,பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் , ”கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் இரத்து செய்யப்பட்டு 31.01.2022 வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.மேலும்,பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்படுவதால் 22.01.2022 அன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்களுக்கு விடுமுறை