#BREAKING திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
Updated: Dec 2, 2025, 18:58 IST1764682086338
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வலுவிழந்த டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக கன மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் பொன்னேரியில் 21 செமீ மழை கொட்டித் தீர்த்ததால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியின் 1வது வார்டிற்கு உட்பட்ட கலைஞர் நகர், ராஜேஸ்வரி நகர் குடியிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது. பெரும்பாலான வீடுகளின் வாசல் வரை மழை நீர் தேங்கி நிற்கிறது. கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


