அனைத்துப் பள்ளிகளிலும் இன்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த ஏற்பாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

உயர்கல்வி சேர்க்கை தொடர்பாக, அனைத்துப் பள்ளிகளிலும் இன்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk stalin

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் , "12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராமல் உள்ள மாணவர்கள் தொடர்பாக, பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க இன்று அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நம் பிள்ளைகளுக்கு உகந்த, அவர்கள் விரும்பிய உயர்கல்வியை அளித்து அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தைக் கட்டமைப்போம் "என பெற்றோர்களுக்கு முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

MK Stalin

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இன்று பள்ளி மேலாண்மை கூட்டம் நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடிக்காமல் பள்ளியிலிருந்து இடைநின்றி இருந்தாலோ அல்லது வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற பிறகு உயர் கல்வியை தொடராமல் இருந்தாலும் , அந்த வகுப்புகளில் தோல்வி அடைந்து இருந்தாலும் அவர்களுக்கு நாம் தான் நல்வழி காட்ட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.  உயர் கல்வி குறித்து உரிய ஆலோசனைகள் வழங்குவதற்கு வழிகாட்டும் குழுவும் பள்ளிகளில் உங்களுக்காக காத்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்