ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு
Apr 23, 2025, 19:48 IST1745417883317
அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் ஜூன் 2ல் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆறு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளையுடன் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்து, கோடை விடுமுறை தொடங்குகிறது. பள்ளி திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆசிரியர்கள் விடைதாள் திருத்து பணியினை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் ஏப்ரம் 30 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


