கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை..!!

 
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை..!!


கடல் சீற்றம் மற்றும் கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரியில் உள்ள கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  கடற்கரை படித்துறை, முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகளை அமைத்துள்ள போலீசார், கடலில் இறங்க முயற்சி செய்யும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் , பிள்ளைதோப்பு பகுதியில்   தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.  கடல் சீற்றத்தால் கரையோர வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.  நள்ளிரவில் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் , மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியெற்றப்பட்டனர்.  கடல்நீர் வடிந்த வீடுகளில்  மணல் குவிந்து கிடப்பதால் அங்கு வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  

Image

மேலும் சில வீடுகளில் இன்னும் கடல்நீர் வெளியேறாமல் உள்ளதால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தற்போதும் கடல்சீற்றம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடல் சீற்றம் மற்றும் கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரியில் உள்ள கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை சூரிய உதயம் காணவும், மூக்கடல் சங்கம் மற்றும் படித்துறை பகுதிகளில்  கடலில் இறங்கவும்  ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.  அவர்களை தடுப்புகள் அமைத்து போலீஸார் தடுத்து வருகின்றனர்.  கடலில் இறங்க முயற்சிக்கும் பொதுமக்களையும் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.