சென்னையில் 2 இடங்களில் கடற்பாசி பூங்கா.. சிஎம்டிஏவுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி..!!

 
chennai corporation chennai corporation

சென்னை பாடி மற்றும் துரைப்பாக்கத்தில் காலநிலை எதிர்ப்பு கடற்பாசி பூங்கா அமைக்க சிஎம்டிஏவுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.  

சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மாத இறுதியிலும்  மாமன்றக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த மாமன்றக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்ட பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கவுன்சிலர்கள் எடுத்துரைப்பார்கள். மேலும் புதிய திட்ட பணிகளுக்கும் மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களால் முன்மொழியப்பட்டு , அனுமதி வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். அந்தவகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில்  காலநிலை எதிர்ப்பு கடற்பாசி பூங்கா அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது. 

சென்னையில் 2 இடங்களில் கடற்பாசி பூங்கா.. சிஎம்டிஏவுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி..!!

முன்னதாக சென்னையில் உள்ள 7  இடங்களில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதமாக கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது  நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது முதல் கட்டமாக சென்னையில் இரண்டு இடங்களில் காலநிலை எதிர்ப்பு கடற்பாசி பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.  அதன்படி  பாடி இளங்கோ நகரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திலும்,  துரைப்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி மைதானத்திலும் இந்த  ஸ்பான்ச் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தமாக  ஏழு இடங்களில் சிஎம்டிஏ மூலமாக கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது இரண்டு இடங்களில் புங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்க  சிஎம்டிஏவுக்கு, சென்னை மாநகராட்சி முன் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஸ்பான்ச் பூங்காக்கள் பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டும் அல்லாமல்,  சென்னையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு அதிக மரங்களோடும்,  மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை சேகரித்து வைக்கும் விதமாகவும்  இருக்கும் என கூறப்படுகிறது.