சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு..!

 
1

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதார்கள் மணிமண்டபத்தில் நாளை விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், சமுதாய அமைப்பு சார்பில் அக்.27-ம் தேதி காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்.30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஸ் பரிந்துரையில் அக்.23-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் பிஎன்எஸ் 163 தடை (144 தடை உத்தரவு) உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பிறப்பித்துள்ளார்.