தேசிய விருதை வென்றுள்ள தமிழ் திரையுலக படைப்பாளிகளுக்கு சீமான் வாழ்த்து

 
seeman seeman

தேசிய விருதை வென்றுள்ள  தமிழ் திரையுலக படைப்பாளிகளுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூகவலைத்தள பக்கத்தில் , 69வது தேசிய திரைப்பட விருதுகளுக்கானப் பட்டியலில், ‘கடைசி விவசாயி’ திரைப்படத்துக்கு சிறந்தப் படத்துக்கான விருதும், அப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய மறைந்த ஐயா நல்லாண்டி அவர்களுக்கு சிறப்புப்பிரிவில் நடிப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வினைத் தருகிறது. அப்படத்தை இயக்கிய சிறந்ததொரு படைப்பாளி எனது பாசத்திற்குரிய இளவல் மணிகண்டன் அவர்களுக்கும், தயாரித்த தனித்துவமிக்க திரைக்கலைஞன் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்களுக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்!


புதுமையை விரும்பும் இயக்குநர் அன்புச்சகோதரர் பார்த்திபன் அவர்களது இயக்கத்தில் வெளிவந்த, ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்தப் பாடகி விருதைப் பெற்றுள்ள ஸ்ரேயா கோசல் அவர்களுக்கும், 'கருவறை' ஆவணப்படத்திற்காக சிறப்பு பிரிவில் தேசிய விருது பெறும் அன்புத்தம்பி ஸ்ரீகாந்த் தேவா அவர்களுக்கும், சிறந்தக் கல்வித் திரைப்படமாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ படத்தின் இயக்குநர் அன்புச்சகோதரர் பி.லெனின் அவர்களுக்கும் என்னுடைய உளப்பூர்வமான வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.