ரோபோ சங்கர் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி..!

 
1 1

நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் காலமானார். அவரது மறைவு தன்னை மனவேதனையும் அடையச்செய்ததாக சீமான் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் X பதிவில், "மக்களை மகிழ்விக்கும் தனித்துவமிக்க நகைச்சுவை திறனால் சின்னத்திரையில் தனக்கென தனியிடம் பிடித்ததோடு, தமிழ்த்திரையில் சாதித்துக்கொண்டிருந்த வேளையில், அனைத்தும் பொய்த்து போகும் வகையில் தம்பி ரோபோ சங்கரின் மறைவு பேரிடியாக அமைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும் சற்றும் முன் நேரில் வந்த சீமான் ரோபோ ஷங்கருக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். மேலும் ரோபோ குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்