கட்சிக்கு இது களையுதிர் காலம் - சீமான் பேட்டி

 
seeman seeman

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகல் குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் அக்கட்சியிலிருந்து விலகியதாகத் தகவல் பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டுள்ளதால் நாம் தமிழர் கட்சியின் குழப்பம் அடைந்துள்ளனர். கட்சி பொறுப்புகளில் இருந்து விலகுவதாக வெளியாகும் தகவல் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, எல்லோருக்கும் ஒரே நேரத்தில் சொல்ல விரும்புகிறேன், விரைவில் சொல்கிறேன் என காளியம்மாள் பதில் அளித்துள்ளார். 

இந்த நிலையில், காளியம்மாள் விலகல் குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இலையுதிர் காலம் போல எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து செல்லலாம். அது அவர்கள் முடிவு கட்சியில் இருப்பதற்கும், விலகுவதற்கும் காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது என கூறினார்.